பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/12/2017

Dinakaran 11.8.2017


'இதே நிலை நீடித்தால் அரசு ஸ்தம்பிக்கும்': எச்சரிக்கும் அரசு ஊழியர்கள்!

ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளருமான முத்துப்பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும்போது...
"சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின் அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் இயக்கங்கள் இணைந்து, ஜாக்டோ ஜியோ என்ற கூட்டமைப்பின் மூலம் புதிய பென்சன் திட்டத்தைக் கைவிட வேண்டும், ஊதியக்குழு மாற்றத்தை அமல்படுத்திட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக, கடந்த மாதம் 18-ம் தேதி மாவட்டத் தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம், அதன்பின், கடந்த 5-ம் தேதி காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி, சென்னை புற நகரில் காவல் துறையால் தடுத்துவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களையும் மீறி சென்னையே ஸ்தம்பிக்கும் வகையில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சேப்பாக்கம் மைதானத்தின் முன்பு கூடி இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.
ஆர்ப்பாட்டம் முடிந்துள்ள நிலையில் மாநில நிர்வாகிகளை தமிழக அரசு அழைத்துப் பேசாமல் மௌனம் காப்பது என்பது, எங்களை அரசே போராட்டக்களத்துக்குத் தள்ளுகிறது. மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் காலம், கடந்த மார்ச் 25-ம் தேதியுடன் முடிந்துவிட்ட நிலையில், அந்தக் குழுவிடமிருந்து அறிக்கையைப் பெறாமல், மீண்டும் நவம்பர் வரை கால நீட்டிப்புச் செய்திருப்பது எங்களது போராட்டத்தை தமிழக அரசு கொச்சைப்படுத்தும் செயலாகும். 
போராடும் அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தாமல், போராட்டக்களத்துக்கே வராத ஆளும் அரசுகளின் ஏவலாளியாகச் செயல்படும் அமைப்புகளோடு தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது போராட்டக்களத்தில் கோபாவேசத்தோடு போராடிய ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களைக் கோபப்படுத்தியுள்ளது. மேலும், தமிழக அரசு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேசி, கோரிக்கைகளுக்குத் தீர்வு காணவில்லையென்றால், திட்டமிட்டபடி வரும் ஆகஸ்டு 22-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும். மீண்டும் இதே நிலை தொடர்ந்தால், செப்டம்பர் 7-ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இதில் 100 சதவிகித ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள். இந்த வேலை நிறுத்தத்தின்மூலம் தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடும் ஸ்தம்பிக்கும்' என அவர் எச்சரித்தார்.
Source: Vikatan.com

.

8/09/2017

தமிழக அரசு தொடர்ந்து மௌனம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 22ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டவட்டம்

சிவகங்கை: அரசூழியர் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பை ஏற்படுத்தி மாவட்டம் மற்றும் மாநில தலைநகரில் இரண்டு கட்ட போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். இப்போராட்டத்தின் வாயிலாக 1.4.2003க்கு பின்னால் பணியேற்றுள்ள அனைத்து வகை பணியாளர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று ஊதிய மாற்றம், படிகள் அறிவித்தது போல் தமிழக அரசும் மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றத்தினை, ஊதிய முரண்பாடுகளை களைந்து அமுல்படுத்திட வேண்டும், ஊதியக்குழுவினை அமுல்படுத்துவதற்கு முன் 1.1.2016 முதல் இடைக்கால நிவாரணத்தினை உடனடியாக அறிவித்திட வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் ஆகியவற்றை ஒழித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தினை அறிவித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆனால் இரண்டு கட்ட போராட்டத்திற்கு பின்பும் தமிழக அரசு எவ்வித பதிலும் அளிக்காமல் மௌனம் காப்பதால் உயர்மட்ட குழுவின் முடிவின் படி திட்டமிட்டபடி வருகிற 22ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளருமான முத்துப்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது
சுமார் 14 ஆண்டுகளுக்கு பின் அனைத்து ஆசிரியர் அரசூழியர் இயக்கங்களும் இணைந்து ஜாக்டோ ஜியோ என்ற கூட்டமைப்பின் மூலம் புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதியக்குழு மாற்றத்தை அமுல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  முதல் கட்டமாக கடந்த மாதம் 18ந் தேதி மாவட்ட தலைநகரில் ஆரப்பாட்டம் நடத்தினோம், அதன் பின் கடந்த 5ந் தேதி காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி, சென்னை புற நகரில் காவல் துறையால் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களையும் மீறி சென்னையே ஸ்தம்பிக்கும் வகையில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் அரசூழியர்கள் சேப்பாக்கம் மைதானத்தின் முன்பு குழுமி இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டத்தை சென்னையே அதிரும் வகையில் நடத்தி முடித்துள்ளோம்.
ஆர்ப்பாட்டம் முடிந்துள்ள நிலையில் மாநில நிர்வாகிகளை தமிழக அரசு அழைத்து பேசாமல் மௌனம் காப்பது என்பது எங்களை அரசே போராட்டக்களத்திற்கு தள்ளுகிறது. மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் காலம் கடந்த மார்ச் 25ந் தேதியுடன் முடிந்துவிட்ட நிலையில் அக்குழுவிடமிருந்து அறிக்கையை பெறாமல் மீண்டும் நவம்பர் வரை கால நீட்டிப்பு செய்திருப்பது எங்களது போராட்டத்தை தமிழக அரசு கொச்சைப்படுத்தும் செயலாகும்.
போராடும் அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தாமல் போராட்டக்களத்திற்கே வராத ஆளும் அரசுகளின் ஏவலாளியாக செயல்படும் அமைப்புகளோடு தமிழக முதல்வர் பேச்சு வார்த்தை நடத்துவது என்பது போராட்டக் களத்தில் கோபாவேசத்தோடு போராடிய ஆசிரியர் அரசூழியர்களை கோபப்படுத்தியுள்ளது. இனிமேலும் தமிழக அரசு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காணவில்லையென்றால் திட்டமிட்டபடி வருகிற ஆகஸ்டு 22ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும். மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் செப்டம்பர் 7ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இதில் நூறு சதவீதம் ஆசிரியர்கள் அரசூழியர்கள் பங்கேற்பார்கள். இவ்வேலை நிறுத்தத்தின் மூலம் தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடும் ஸ்தம்பிக்கும் என அவர் எச்சரித்தார்.