பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/26/2015

தினகரன் செய்தி வெளியீடு 25.8.15



தமிழ்நாடு மாநில சட்டசபை கூட்டம் 2015 - 24.08.2015 முதல் காலை 9.30 மணியளவில் அலுவலகத்திற்கு வருகை புரிய வேண்டும் மற்றும் தலைமையிடத்தில் இருக்க இயக்குனர் உத்தரவு


தமிழக பள்ளி ஆசிரியருக்கு தகவல் தொழில்நுட்ப விருது

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப கற்பித்தல் விருதுக்கு, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் அன்பழகன், தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், அடுத்த மாதம், 5ம் தேதி, ஜனாதிபதியிடம் விருது பெறுகிறார்.மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், தகவல்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு, 2010 முதல் ஆண்டுதோறும், தகவல் தொழில்நுட்ப கற்பித்தல் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதை, தமிழகத்தில் இதுவரை, ஐந்து ஆசிரியர்கள் பெற்றுள்ளனர்.கடந்த, 2014 - 15ம் ஆண்டிற்கான விருதுக்கு, தமிழகம், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, உத்தரகண்ட், அரியானா, ம.பி., மற்றும் டில்லி மாநிலங்களின், ஒன்பது ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர்.

தமிழகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியர் அன்பழகன், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தினமான, அடுத்த மாதம், 5ம் தேதி, டில்லியில், ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கப்படும்.
எளிய பொருட்கள் மூலம் அறிவியல் மாதிரிகளை எவ்வாறு செய்வது என்ற செயல் முறையை, மற்ற மாவட்ட மாணவர்களுக்கு, 'ஆன்-லைனில்' செய்து காட்டியதற்காக விருது வழங்கப்படுகிறது.ஆசிரியர் அன்பழகன், ஏற்கனவே மாநில அளவிலும், தேசிய அளவிலும், 'மைக்ரோசாப்ட் நிறுவன விருதையும் பெற்றுள்ளார். 2013ல், ஜப்பானில் நடந்த, கணித பாடத்திட்ட வடிவமைப்பு பயிற்சி முகாமில் பங்கேற்று, பயிற்சி பெற்றுள்ளார்.

மாவட்ட மறுதலுக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்காக இடைநிலையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விபரம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை மாவட்டம்
வெளியீடு: ஆ.முத்துப்பாண்டியன், மாவட்டச்செயலாளர்
சிவகங்கை ஒன்றியம்
1. அண்ணா நகர்
2. லக்ஷிமிபுரம்
ம.ஜெயக்குமார் 9655070684
தேவகோட்டை ஒன்றியம்
1. வாடி நன்னியூர்
2. சிறுநல்லூர்
3. கட்டணூர்
4. கைக்குடி
5. மாவிடுதி நல்லூர்
பா.தனுஷ்கோடி 9443181443
ஜோசப் 9843075850
காளையார்கோயில் ஒன்றியம்
1. பெரிய ஓலைக்குடிப்பட்டி
2. பில்லத்தி
3. காடனேரி
ம.சகாயதைனேஸ் 9942575550
இளையான்குடி ஒன்றியம்
1. பெரும்பச்சேரி
2. சந்தேனந்தல்
3. மருதங்கநல்லூர் -2
4. வலகனி
5. மேல விசவனூர்
6. வேரியாத்தகண்டன்
7. கீழையூர்
8. களத்தூர்
9. புக்குளம்
10. வடக்கு வண்டல்
11. நன்னியாவூர்
12. வடக்கு விசவூனூர்
13. இளமனூர்
14. சாத்தனி
என்.தோமை 9486671498
திருப்புவனம் ஒன்றியம்
காலிப்பணியிடம் இல்லை
அ.சத்தியேந்திரன் 9942262370
மானாமதுரை ஒன்றியம்
1. மேலநட்டனூர்
த.தங்கமாரியப்பன் 9787315793
சாக்கோட்டை ஒன்றியம்
காலிப்பணியிடம் இல்லை
எம்.ஜேம்ஸ் கென்னடி 9442756749
கல்லல் ஒன்றியம்
1. வெளியாறி
2. மேல்குடி
3. வேளனிப்பட்டி
4. தண்ணீர்பந்தல்
5. பனைத்திருத்தி
எஸ்.சேவியர் சத்தியநாதன் 9787491475
சிங்கம்புணரி ஒன்றியம்
1. கொள்ளுகுடிப்பட்டி
பொன்.பால்துரை 9942612121
திருப்பத்தூர் ஒன்றியம்
1. எம்.புதூர்
2. பிராமணம்பட்டி
3. மேலையான்பட்டி
4. சோழம்பட்டி
5. வடுகப்படடி
6. சுண்டக்காடு
7. பூலாங்குறிச்சி 3
8. சேவினிப்பட்டி 2
9. கணக்கம்பட்டி 2
10. இளையாத்தங்குடி
11. மகிபாலன்பட்டி
12. மார்கண்டேயன்பட்டி
சிங்கராயர்.வெ 9443871304
மு.ஜெயக்குமார் 9715907934
எஸ்.புதூர் ஒன்றியம்
1. கரிசல்பட்டி
2. தேத்தாம்பட்டி
3. மின்னமலைப்பட்டி
4. உலகம்பட்டி
5. செம்மாம்பட்டி
6. வி.புதூர்
7. கொண்டபாளையம்
8. மேலவண்ணாயிருப்பு
9. குறும்பலூர்
10. உரத்துப்பட்டி
ஜெ.சுதர்சன் 9159461165
கண்ணங்குடி ஒன்றியம்
1. கொடிக்குளம்
2. தேவன்டாதாவு
மு.க.புரட்சித்தம்பி 9524626364
மொத்த காலிப்பணியிடம் 60
பட்டதாரி ஆசிரியர் பணியிடம்:
அறிவியல் (மற்ற பாடங்கள் காலி இல்லை)
1. தேவகோட்டை ஒன்றியம் - பாரதி வேலங்குளம்
2. எஸ்.புதூர் ஒன்றியம் - அரியாண்டிப்பட்டி
• குறிப்பு: காலிப்பணியிடம் நிபந்தனைகளுக்கு உடட்பட்டது. தகவலுக்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது. வட்டராச் செயலாளர்களின் குறுந்தகவல்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் தோழர் எஸ்.குணசேகரன் அவர்களுக்கு அவசர கடிதம்


8/18/2015

சட்டசபையில் வெளியாகுமா?ஆசிரியர் நியமனம்


சிவகங்கையில் மாறுதல்கலந்தாய்வு முறைகேடு - தினமலர் செய்தி வெளியீடு

சிவகங்கையில் மாறுதல்கலந்தாய்வு முறைகேடு - தினகரன் செய்தி வெளியீடு



சிவகங்கையில் மாறுதல்கலந்தாய்வு முறைகேடு - தினத்தந்தி செய்தி வெளியீடு

சிவகங்கையில் கலந்தாய்வை புறக்கணித்து தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வில் காலிப்பணியிடங்களை வெளிப்படையாக வெளியிட வலியுறுத்தி கலந்தாய்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சிவகங்கை ஒன்றியத்தில் புதுப்பட்டி, காளையார்கோவில் ஒன்றியத்தில் சிலுக்கபட்டி, பெரிய நரிக்கோட்டை, மானாமதுரை ஒன்றியத்தில் நவதாவு ஆகிய ஊர்களில் காலி பணியிடங்களை மறைத்து கலந்தாய்வு நடப்பதாகக் கூறி தலைமையாசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
காலிப்பணியிடங்களை முறையாக வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவலின்பேரில் சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் மலைச்சாமி தலைமையிலான போலீஸார், தலைமையாசிரியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, கலந்தாய்வு தடைபட்டது. அதன் பின் அமைதியாக நடைபெற்றது.
Source:dinamani

8/12/2015

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட கூட்டம்

இன்று (11.8.2015) சிவகங்கையில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட  கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தவமணி செல்வம் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் சங்கர் தீர்மானங்களை முன் மொழிந்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு உறுப்பினர் மு.க.புரட்சித்தம்பி, மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாவட்டப்பொதுக்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ், வட்டாரச்செயலாளர்கள் சகாயதைனேஸ், ஜெயக்குமார், சிவகங்கை வட்டாரத் தலைவர் டேவிட் ரொசாரியோ, பொருளாளர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. புதிய பென்சன் திட்டத்தை கைவிடக் கோரி செபடம்பர்-2ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பது என முடிவாற்றப்பட்டது.
2. வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டினை வருகிற 23.8.2015ல் சிவகங்கையில் நடத்துவது எனவும், அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இயக்கங்களின் நிர்வாகிகளை பங்கேற்கச் செய்வது எனவும் முடிவாற்றப்பட்டது.
3. தற்பொழுது நடைபெற இருக்கும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை எவ்வித ஊழலுக்கும் இடம் தராமல் வெளிப்படையாக நடத்த வேண்டும் என மாவட்ட கல்வித்துறையை .இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
4. மாறுதல் கலந்தாய்விற்கு முன்னால் முறைகேடாக நிர்வாக மாறுதலை வழங்குவதை தவிர்க்க மாவட்ட கல்வித் துறையை இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

வேலை நிறுத்தம் - ஜேக்டோ முடிவு


அகில இந்திய பொது வேலை நிறுத்த ஆயத்த மாநாடு அழைப்பிதழ்


தொடக்கக் கல்வி - 2015-16ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்